30 கிலோ எடை கொண்ட 10 மாதக் குழந்தை

10 மாதங்களில் 30 கிலோ எடை கொண்ட குழந்தையின் சோகப் பின்னணி...
30 கிலோ எடை கொண்ட 10 மாதக் குழந்தை

பிறந்து 10 மாதங்களே ஆன ஆண் குழந்தையின் உடல் எடை 30 கிலோவாக அதிகரித்துள்ளது. இதுவே தற்போது உலகின் அதிக எடை கொண்ட குழந்தையாகவும் உள்ளது.

மெக்ஸிகோவைச் சேர்ந்த இந்தக் குழந்தையின் பெயர் லூயிஸ் மானுவேல். பிறந்தது முதலே இந்தக் குழந்தையின் எடை பலமடங்கு அதிகரிக்கத் துவங்கியது. 10 மாதங்களிலேயே உடல் எடை 30 கிலோவாக அதிகரித்தது. இதனால் அக்குழந்தையின் உடல் வளர்ச்சி அதிகரித்தது. 9 வயது சிறுவனின் நிலைக்கு இப்போதே அக்குழந்தை சென்றுவிடட்து.

இதயைடுத்து மருத்துவரைச் சந்தித்த அக்குழந்தையின் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவ அறிக்கையின்படி அக்குழந்தைக்கு ப்ராடெர் வில்லி சின்ட்ரோம் (Prader-Willi syndrome) எனும் அறிய வகை குறைபாடு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இதனால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அடிக்கடி பசி எடுக்கும். இதன்காரணமாக தன் வயதுடைய சாதாரண குழந்தையின் உணவைப் போன்று 6 மடங்கு அதிகளவில் உணவருந்தும் நிலைக்கு தள்ளப்படுவர்.

மேலும், இந்தக் குறைபாடு காரணமாக தூக்கமின்மையும் ஏற்படும். எலும்புகளின் உறுதித்தன்மை குறைந்து காணப்படும். உடலின் இதர பாகங்களின் வளர்ச்சி சீராக அமையாது. உடலில் குறிப்பிட்ட மரபணுவின் செயல்பாடு நிறுத்தப்படுவதால் இந்தக் குறைபாடு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com