விநோத மிருகம் என வலைத்தளத்தில் வலம் வந்த மனித முகம் கொண்ட பூனைக் குட்டி, சாதாரண பொம்மை தான் எனக் கண்டுபிடிப்பு!

கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருவது மலேசியாவில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த விநோத மிருக குட்டி.
விநோத மிருகம் என வலைத்தளத்தில் வலம் வந்த மனித முகம் கொண்ட பூனைக் குட்டி, சாதாரண பொம்மை தான் எனக் கண்டுபிடிப்பு!

கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருவது மலேசியாவில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த விநோத மிருக குட்டி. ஆனால் மலேசியா காவல் துறை இது பொய்யான செய்தி என அறிவித்துள்ளது.

மலேசியாவில் உள்ள பகாங் பகுதியில் இந்த மனித முகம் கொண்ட பூனைக் குட்டி இருப்பதாகவும் அதன் சில புகைப்படங்களும், வீடியோக்களும் இணையதளத்தில் வைரலான நிலையில், தற்போது மலேசியா போலீஸ் அந்தப் புகைப்படம் போலியானது, சமூக வலைத்தளத்தில் பகிர்வதற்கு முன்பு அதை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் என கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கூறியுள்ளது. இனிமேலும் இதை யாரும் பகிர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிறந்த குழந்தை போன்ற தோலுடன், உடலில் எங்கும் எந்த ரோமங்களும் இல்லாமல், தலையில் மட்டும் கருப்பு நிற முடிகளுடன், மனித குழந்தையை போன்ற முக அமைப்பு மற்றும் நான்கு கால் விரல்களிலும் நல்ல நீளமான நகம் மற்றும் கூர்மையான பற்களுடன் பார்ப்பதற்கு பூனைக் குட்டியை போல் இருக்கும் இது இணையத்தில் விற்கப்படும் ஒரு சிலிக்கான் பொம்மையாம்.

இதுவரை தனது கண்களைத் திறக்காமல் எப்போதும் கண்களை மூடி உறங்குவது போன்றே இருக்கும் இது, யாராவது கையில் வைத்திருக்கும் போதோ அல்லது தொடும் போதோ மட்டுமே அசைவது பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில், இது ஒரு சாதாரண ‘சிலிக்கான் ஓநாய் குட்டி பொம்மை’ எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இதைப்போன்ற சிலிக்கானால் செய்யப்பட்ட அவத்தார் குழந்தைகளைப் போன்ற பொம்மைகள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com