அமெரிக்காவில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 42-ஆக உயர்வு

அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்தது.

அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்தது.
இதுகுறித்து கலிஃபோர்னியா காடுகள் மற்றும் தீ பாதுகாப்பு துறை (கால் ஃபயர்) தெரிவித்ததாவது:
கலிஃபோர்னியா மாகாணம் சான் பிரான்சிஸ்கோ காடுகளில் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தீப்பிடித்தது. இதில், சிக்கி பலியான ஒருவரது உடலை மீட்புக்குழுவினர் சோனோமா மாவட்டத்தில் கண்டெடுத்துள்ளனர். இதையடுத்து, காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்தது. 
காற்றின் வேகத்தால் கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக கொழுந்து விட்டு எரிந்த அந்த தீயால் 850 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான காடுகள் நாசமாகியதுடன், 5,700 வீடுகள், இதர கட்டடங்கள் தீக்கிரையாகின.
தீயணைப்புப் பணிகளில் 10,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காடுகளில் தற்போது நிலவும், குளிர்ச்சியான கால நிலை, அதிக ஈரப்பதம் காரணமாக நிலைமை பெருமளவு கட்டுக்குள் வந்துள்ளது. 
கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதும் தீயணைப்பு வீரர்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு காட்டுத் தீயால் 75,000 பேர் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 22,000-ஆக குறைந்துள்ளது என்று கால் ஃபயர் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com