தென்னாப்பிரிக்காவில் காந்தி அருங்காட்சியகம்

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை மத்திய வெளியுறவுத் துறை இணைமைச்சர் வி.கே. சிங், புதன்கிழமை திறந்துவைத்தார்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி அருங்காட்சியகம்

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை மத்திய வெளியுறவுத் துறை இணைமைச்சர் வி.கே. சிங், புதன்கிழமை திறந்துவைத்தார். இந்த அருங்காட்சியகம் காந்திக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையும், அறப் போராட்ட முறையும் சர்வதேச அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு காந்தியடிகளின் நினைவாக கை ராட்டை உள்ளிட்ட காந்தியடிகளின் வாழ்க்கையில் தொடர்புடைய பல்வேறு பழங்காலப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
டர்பன் நகரில் காந்தி வசித்து வந்தபோது, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் மீது காட்டப்பட்ட பாரபட்சத்தை எதிர்த்து பொதுக் கூட்டங்களை நடத்துவதற்காக இந்த நிலத்தை கடந்த 1897}ஆம் ஆண்டு வாங்கினார். 1914}ஆம் ஆண்டு டர்பன் நகரை விட்டு அவர் வெளியேறியபோது, நேட்டால் இந்திய காங்கிரஸýக்கு அந்த நிலத்தை அளித்துவிட்டார். 
நேட்டால் இந்திய காங்கிரஸ், தென்னாப்பிரிக்காவின் நேட்டால் பகுதியில் இந்தியர்கள் மீது வெள்ளையர்கள் காட்டிய பாரபட்சத்துக்கு எதிராகப் போராட உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இதனை காந்தியடிகள்தான் உருவாக்கினார்.
டர்பனில் காந்தியடிகள் உருவாக்கிய பீனிக்ஸ் குடியிருப்புப் பகுதி அருகே ராமகிருஷ்ண இல்லத்தில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட சமையலறை, உணவுக் கூடம் ஆகியவற்றையும் அமைச்சர் வி.கே. சிங் திறந்து வைத்தார். முன்னதாக, பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டபோது இதற்கான நிதியுதவியை அறிவித்தார்.
இங்கு, வயதானவர்கள், எச்ஐவி நோயாளிகள் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் அளிக்கப்படுகிறது. இது தவிர அனாதைச் சிறார்களுக்கான திறன் மேம்பாட்டு மையமும் இங்கு செயல்பட்டு வருகிறது. பீனிக்ஸ் குடியிருப்புப் பகுதியில் இந்திய நிதியுதவியில் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தகவல் தொழில்நுட்ப மையத்தையும் வி.கே. சிங் தொடங்கி வைத்தார். இங்குதான் காந்தியடிகள் "இந்தியன் ஒப்பீனியன்' பத்திரிகையைத் தொடங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com