'நான் மிகவும் புத்திசாலியான மனிதன்': தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்துக் கொண்ட அமெரிக்க அதிபர்!

புகழ்மிக்க கல்லூரி  ஒன்றில் படித்த நான் மிகவும் புத்திசாலியான மனிதன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.    
'நான் மிகவும் புத்திசாலியான மனிதன்': தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்துக் கொண்ட அமெரிக்க அதிபர்!

வாஷிங்க்டன்: புகழ்மிக்க கல்லூரி  ஒன்றில் படித்த நான் மிகவும் புத்திசாலியான மனிதன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.    

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பல்வேறு செயல்பாடுகளின் காரணமாக தொடர்ச்சியாக ஊடகங்களால் விமர்சிக்கப்படும் ஒருவராக இருக்கிறார். அத்துடன் அவ்வப்பொழுது சர்ச்சைகளை கிளப்பும் விதமாக ஏதாவது கருத்துக்களை தெரிவித்துக் கொண்டே இருப்பார்.

தற்பொழுது அவரது ஆட்சி மற்றும் நிர்வாக திறமைக்கு எதிராக கருத்து கூறிய அவரது குடியரசுக் கட்சியினைச் சேர்ந்த ஜெப் பிளாக், பாப் கோரக்கர் ஆகியோருக்கு எதிராக விமர்சனத்துக்குரிய கருத்துக்களை தெர்வித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு:

ஊடகங்கள் என்னை மிகைப்படுத்தி தவறான ஒருவராக காட்டுகின்றன. நான் மிகவும் புகழ் பெற்ற குழுமக் கல்லூரி ஒன்றுக்கு சென்றுள்ளேன். நான் சிறப்பான மாணவனாக இருந்தேன். அங்கு நான் மிகவும் நன்றாக செயல்பட்டேன். நான் மிகவும் புத்திசாலியான மனிதன். ஆனால் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் நான் எப்படிப்பட்டவனோ அதற்கு தொடர்பில்லாத மற்றொருவனாக என்னை சித்தரிக்கிறார்கள்.

இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 1968-ஆம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் புகழ் மிக்க வார்ட்டன் கல்லூரியில் படிப்பினை முடித்தவர். அதற்கு முன்னதாக ப்ரோன்ஸில் உள்ள போர்ட்ஹாம் பல்கலையில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com