ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்தது கேட்டாலோனியா

ஸ்பெயின் நாட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக பிரிந்து தனிநாடாக தன்னை அறிவித்துக்கொண்டது கேட்டாலோனியா.
ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்தது கேட்டாலோனியா

ஸ்பெயின் நாட்டின் முக்கிய மாகாணங்களில் ஒன்றாக இருந்த கேட்டாலோனியா, வெள்ளிக்கிழமை முதல் தன்னை தனிநாடாக அறிவித்துக்கொண்டது.

ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் கேட்டாலோனியா மாகாணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக செயல்படுவது தொடர்பாக செப்டம்பர் 1-ந் தேதி அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக செயல்படுவதற்கு அம்மாகாண மக்கள் 90 சதவீதத்துக்கும் மேல் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஸ்பெயினில் இருந்து அதிகாரப்பூர்வமாக பிரிவதாக கேட்டாலோனியா நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com