இந்தியாவுக்கான புதிய தூதர் கென்னத் ஜஸ்டர்

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு சர்வதேச பொருளாதார உதவிகள் மற்றும் இந்திய விவகாரங்களில் நிபுணரான கென்னத் ஜஸ்டரின் பெயரை அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு சர்வதேச பொருளாதார உதவிகள் மற்றும் இந்திய விவகாரங்களில் நிபுணரான கென்னத் ஜஸ்டரின் பெயரை அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

தற்போது கென்னத் ஜஸ்டர் வகித்து வரும் சர்வதேச பொருளாதார விவகாரங்களில் அதிபர் டிரம்பின் ஆலோசகர் பதவிக்கு, ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது இந்தியாவுக்கான தூதராக இருந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மா நியமிக்கப்படவிருக்கிறார்.
ஏற்கெனவே, இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்கத் தூதராக கென்னத் ஜஸ்டர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அதிபர் மாளிகை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான தூதர் பதவியிலிருந்து ரிச்சர்ட் வர்மா விலகினார். அதிலிருந்து அந்தப் பதவி தொடர்ந்து காலியாக இருந்து வந்த நிலையில், கென்னத் ஜஸ்டரின் நியமனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வகித்து வரும் அதிபருக்கான சர்வதேச பொருளாதார ஆலோசகர் பதவிக்கு முன்னதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை வர்த்தக இணையமைச்சராக கென்னத் ஜஸ்டர் பொறுப்பு வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com