பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா பயணம்! 

இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து உறுப்பு நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மதியம் சீனா புறப்பட்டு சென்றார்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா பயணம்! 

புதுடெல்லி: இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து உறுப்பு நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மதியம் சீனா புறப்பட்டு சென்றார்.   

இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பேசுவது வழக்கம். உறுப்பு நாடுகள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார விஷயங்கள் இந்த மாநாட்டில் பேசப்படும்.

அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு சீனாவின் சியாமென் நகரில் இன்று துவங்கி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் புது டெல்லியில் தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

மாட்டின் இடையே சீன அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கலாம் எல்லைப்பகுதியில் சமீபத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்த பின்னர் நடக்கவுள்ள இந்தியா-சீனா பிரதமர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com