வடகொரியா அணுஆயுத சோதனை எதிரொலி: தென்கொரியா அதிதீவிர ராணுவப் பயிற்சி

தென்கொரிய அரசு அதிதீவிர ராணுவப் பயிற்சியை திங்கள்கிழமை திடீரென மேற்கொண்டது. இனிவரும் காலங்களிலும் தொடரும் என தென்கொரிய ராணுவ அதிகாரி கிம் ஜாங்-உன் தெரிவித்தார்.
வடகொரியா அணுஆயுத சோதனை எதிரொலி: தென்கொரியா அதிதீவிர ராணுவப் பயிற்சி

சமீப காலமாக வடகொரியா சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனையை வடகொரியா திங்கள்கிழமை மீண்டும் 6-ஆவது முறையாக நடத்தியது. இதனை ஐநா சபையின் அணு ஆயுத கண்காணிப்பு குழு கவனித்து கண்டனம் தெரிவித்தது.

கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6-வது முறையாக வடகொரியா நடத்தியுள்ள அணு ஆயுத சோதனைகள் மிகுந்த கவலை அளிப்பதாகவும் தெரிவித்தது. 

இந்நிலையில், தென்கொரியா அதிதீவிர ராணுவப் பயிற்சியை திங்கள்கிழமை திடீரென மேற்கொண்டது. இதில், வடகொரியா சோதனை நடத்திய அணுஆயுதங்களுக்கு நிகரான ஆயுதங்களை உபயோகித்து பயிற்சி மேற்கொண்டது.

இதுபோன்ற அதிரடி ராணுவப் பயிற்சிகள் இனிவரும் காலங்களிலும் தொடரும் என தென்கொரிய ராணுவ அதிகாரி கிம் ஜாங்-உன் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் வடகொரியாவிடம் 50 கிலோ டன் எடையுள்ள அணுஆயுதங்கள் இருப்பதாக தென்கொரிய உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜீ-இன் ஆகியோரின் கூட்டு நடவடிக்கையின் அடிப்படையில் தென்கொரியாவுக்கு அணுஆயுதங்கள் மீதான கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படவுள்ளது.

மேலும், அமெரிக்காவின் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை தென்கொரியாவுக்கு அளித்து உதவ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

எனவே, வடகொரியாவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் தென்கொரியாவின் 4 இடங்களில் புதிய அணுஆயுத தளவாடம் அமைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. மேலும், இந்த பாதுகாப்பு உபகரணங்களையும் அவ்விடத்தில் சோதிக்க திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com