தீவிரமடையும் இர்மா புயல்: கரீபியன் தீவுகள் சூறை, 12 லட்சம் பேர் பாதிப்பு, 10 பேர் பலி

அமெரிக்காவின் கரீபியன் தீவுகளை தாக்கிய சக்திவாய்ந்த இர்மா புயல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதற்கு தற்போது வரை 10 பேர் உயிரிழந்தனர்.
தீவிரமடையும் இர்மா புயல்: கரீபியன் தீவுகள் சூறை, 12 லட்சம் பேர் பாதிப்பு, 10 பேர் பலி

அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் சக்திவாய்ந்த இர்மா புயல் புதன்கிழமை மதியம் 1:45 மணியளவில் தாக்கியது. சுமார் 185 மைல் வேகத்தில் இந்தப் புயல் கரையைக் கடந்தது. 

இர்மா புயல் காரணமாக ஹைதி, செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்தலெமி ஆகிய தீவுகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இது 5-ம் நிலை புயல் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்தது. 

கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா புயல் காரணமாக வீடுகளின் கூரைகள் பறந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதுவரை கரீபியன் தீவுகளை முற்றிலும் நாசம் செய்தது. இருப்பினும் இந்தப் புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதனால் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஃப்ளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட ஹார்வி புயல் காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பேரழிவை சந்தித்தது. இந்நிலையில், இர்மா புயல் கரீபியன் நாடுகளை தாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com