'ஆங்சான் சூகியின் நோபல் பரிசை திரும்பப் பெற முடியாது'

மியான்மர் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு அளிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை நோபல் பரிசு கமிட்டி நிராகரித்தது.
'ஆங்சான் சூகியின் நோபல் பரிசை திரும்பப் பெற முடியாது'

மியான்மர் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு அளிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை நோபல் பரிசு கமிட்டி நிராகரித்தது.
ரோஹிங்கயா பிரிவு மக்கள் மீதான வன்முறையைத் தடுக்க ஆங்சான் சூகி தவறிவிட்டார். எனவே அவருக்கு 1991-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசைத் திரும்பப் பெற வேண்டும் என்று நோபல் பரிசு கமிட்டியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. உலக அளவில் 3.86 லட்சம் பேர் ஆன்லைன் வழியாக அந்த மனுவில் கையெழுத்திட்டனர். ஆனால் அந்த மனுவை ஏற்று பரிசைத் திரும்பப் பெற இயலாது என்று அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்கும் நார்வே நோபல் இன்ஸ்டிடியூட் தலைவர் ஓலாவ் நியோல்ஸ்டாட் கூறினார். 'ஒருவருக்கு நோபல் பரிசளிப்பதாக அறிவித்துவிட்டால் அதனைத் திரும்பப் பெற இயலாது. இதுவரை நோபல் பரிசளிக்கப்பட்டவர் எவரிடமிருந்தும் அவ்வாறு திரும்பப் பெறப்பட்டதில்லை. பரிசை ரத்து செய்யவும் முடியாது' என்றார் அவர்.
மியான்மரில் ராணுவ ஆட்சியின்போது ஆங்சான் சூகி 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். அதில் 15 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். ஜனநாயகப் போராளி என்ற முறையில் 1991-இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com