வட கொரியாவுக்கு எதிரான  ஐ.நா. தீர்மானத்தில் அமெரிக்கா மனமாற்றம்

சர்வதேசத் தடைகளை மீறி வட கொரியா சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நிகழ்த்தியதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு

சர்வதேசத் தடைகளை மீறி வட கொரியா சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நிகழ்த்தியதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்த வரைவுத் தீர்மானத்தில் முக்கிய மாற்றத்தைச் செய்ய அமெரிக்கா முடிவு செய்தது.

வட கொரியா அண்மையில் மிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நிகழ்த்தியது. அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவே மேற்கத்திய நிபுணர்கள் கருதுகின்றனர். ஏற்கெனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகள் நடைமுறையில் இருக்கும்போது, அதை மீறும் வகையிலும் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும் வட கொரியா தொடர்ந்து ஹைட்ரஜன் குண்டு சோதனையில் ஈடுபட்டதால், அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியது.
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி இது தொடர்பான வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த வாரம் தாக்கல் செய்தார். வட கொரியாவுக்கு பெட்ரோலியம் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு முற்றிலுமாகத் தடை விதிப்பது, வெளிநாடுகளில் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு இருக்கும் சொத்துகளை முடக்குவது, வெளிநாடுகளில் வட கொரிய அரசுக்கு உள்ள வங்கிக் கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட தடைகள் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் பரிசீலித்து வருகின்றன.
இந்த நிலையில், வரைவுத் தீர்மானத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வட கொரியாவின் நட்பு நாடுகளான ரஷியாவும் சீனாவும் அந்தத் தீர்மானத்தை எந்த ஆட்சேபமும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிடம் இந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வெளிநாடுகளில் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு உள்ள சொத்துகளைத் தற்போதைக்கு முடக்கம் செய்யத் தேவையில்லை என்று அமெரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது பரிசீலனையில் உள்ள வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள அந்தப் பரிந்துரையை நீக்கிவிட்டு புதிய வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பரிசீலனைக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com