இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. விவாதம்: இந்தியா ஆதரவு

படுகொலைகள், போர்க் குற்றங்கள், இன அழிப்பு போன்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் விவாதிக்க இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

படுகொலைகள், போர்க் குற்றங்கள், இன அழிப்பு போன்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் விவாதிக்க இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் கூறியதாவது: மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவாதம், வெளிப்படையாகவும், அனைத்து விவகாரங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.
மக்களைப் பாதுகாப்பதுதான் ஒவ்வொரு நாட்டின் முதன்மைப் பொறுப்பாகும். எனவே, அந்த விவகாரம் தொடர்பான விவாதம் ஐ.நா. பொதுச் சபையில் நடைபெறுவது பொருத்தமானதே. அந்த வகையில், 72-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிப்பது தொடர்பான தீர்மானத்துக்குஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்தது என்றார் அவர்.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்பட 113 நாடுகள் வாக்களித்தன. பாகிஸ்தான் உள்ளிட்ட 21 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. 17 நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com