லண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய மூன்றாவது நபர் கைது

லண்டன் சுரங்க ரயிலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீஸார் கைது
லண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய மூன்றாவது நபர் கைது

லண்டன் சுரங்க ரயிலில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

சுரங்க ரயில் பெட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் காயமடைந்தனர். பிளாஸ்டிக் பக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு தொலைவிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் முறையில் வெடிக்கச் செய்யப்பட்டது. ஆனால் அது சரிவர வெடிக்காததால் பெரும் தீ மட்டுமே ஏற்பட்டு பலர் பலத்த தீக்காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றது.

கைதான இருவரில் ஒரு நபரின் வயது 18 என்று தெரிவிக்கப்பட்டது. அகதிச் சிறுவனாக பிரிட்டன் வந்த அந்த நபரைப் பற்றிய அடையாளம் தெரிந்ததும், அவருக்கும் அவரைப் போல மேலும் நூற்றுக்கணக்கான சிறுவர்களுக்கும் அடைக்கலம் அளிக்கப்பட்ட சர்ரே மாவட்ட வீட்டில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவரை நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர். வேல்ஸ் பகுதியில் பிடிபட்ட அந்த நபரின் வயது 25 என தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தொடந்து விசாரணை நடைபெற்று வருகிவதாக எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com