டொனால்டு டிரம்ப் ஒரு மனநோயாளி: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்

டொனால்டு டிரம்ப் ஒரு மனநோயாளி: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வடகொரியா தினந்தோறும் பல ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஹைட்ரஜன் ரக குண்டுகளையும் சோதித்து வருகிறது. மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரிசோதித்தது.

இதனால் அண்டை நாடுகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. குறிப்பாக வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஜப்பானின் மேல் பறந்ததால் அந்த நாடு பதற்றமாகக் காணப்படுகிறது.

இதனால் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ஐநா பொதுக்குழுவில் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தென்கொரியா தன்னை போருக்கு தயார் படுத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகர்பத்தில் குழப்பம் நிலவி வருகிறது.

வடகொரியாவுக்கு யாரும் ஆணையிட்டால் அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்தார். இனி வரும் காலங்களிலும் ஏவுகணைச் சோதனைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியாவின் இதுமாதிரியான செயல்களைத் தொடர்ந்தால் அவர்களை அழித்துவிடுவோம் என தெரிவித்தார். ஆனால், அவரின் இந்தப் பேச்சு எங்களைப் பார்த்து பயந்த நாய் குரைப்பதைப் போன்றது என வடகொரியா பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு எதிராக டிரம்ப் விடுக்கும் மிரட்டல்களுக்கு தக்க விலை கொடுக்க வேண்டியது வரும். டொனால்டு டிரம்ப் ஒரு மனநோயாளி என வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com