ஈரான் புது ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா எச்சரிக்கைக்கு சவால்

அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் புதிய ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை நடத்தியது ஈரான். 
ஈரான் புது ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா எச்சரிக்கைக்கு சவால்

நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கும் விதமாக ஈரான் அரசு புதிய ஏவுகணைச் சோதனையை நடத்தியது.

ஈரான் நாட்டின் ராணுவ அணிவரிசை வெள்ளிக்கிழமை நடத்தியது. அதில், இந்தப் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.

இந்த புதிய மத்திய ரக ஏவுகணையின் மூலம் பல ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் படைத்தது. இதனால் ஈரானின் அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளை எளிதில் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.

2015-ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் தொடர்பான ஒப்பந்தம் உலக நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்டது. இதனால், ஈரான் போன்ற வளைகுடா நாடுகள் அணு ஆயுத தயாரிப்பு மற்றும் ஏவுகணைச் சோதனைகள் நடத்துவதில் கட்டுப்பாடுகள் இருந்தன.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தக் கூடாது என ஈரான் நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு சவால் விடும் வகையில் இந்தச் சோதனையை ஈரான் தற்போது நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com