நியூஸிலாந்து நாடாளுமன்றத் தேர்தல்: எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

நியூஸிலாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நியூஸிலாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெசிந்தா ஆர்டர்ன்.
நியூஸிலாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெசிந்தா ஆர்டர்ன்.

நியூஸிலாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் உள்ள 119 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பதிவு நேரம் முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கி, சில மணி நேரங்களிலேயே முடிவுகள் வெளியாகின. அதில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 
ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், கடந்த மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி புரிந்து வரும் தேசிய கட்சிக்கு 58 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற ஜெசிந்தா ஆர்டர்ன் அந்தக் கட்சிக்குப் புத்துணர்ச்சி அளித்து அதன் ஆதரவை அதிகரிக்கச் செய்தார். தேர்தலில் நியூஸிலாந்து பசுமைக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தொழிலாளர் கட்சி போட்டியிட்டது. ஆனால் இந்தக் கூட்டணிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தொழிலாளர் கட்சி 45 இடங்களிலும் நியூஸிலாந்து பசுமைக் கட்சி 7 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், 9 இடங்களில் வென்ற நியூஸிலாந்து ஃபர்ஸ்ட் என்னும் சிறு கட்சி முக்கியத்துவம் பெறுகிறது. அந்தக் கட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறார் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு நிதானமாக சிந்தித்து முடிவு செய்வோம் என்றார் அவர்.
மூன்று முறை தொடர்ந்து ஆட்சி புரிந்த தேசிய கட்சி, தேர்தலில் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தாலும் தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், மக்களின் முழுமையான ஆதரவை அக்கட்சி பெறவில்லை என்றும், அதனால் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நியூஸிலாந்து ஃபர்ஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். 
தொழிலாளர் கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று, ஆட்சியில் இடம் பிடிக்க வேண்டும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது. ஆனால் தீவிரக் கொள்கை வேறுபாடுகள் கொண்ட நியூஸிலாந்து பசுமைக் கட்சியினருடன் அவர்கள் சுமுகமாக இணைந்து செயல்படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
அக். 12-ஆம் தேதிக்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com