ஒன்றல்ல..இரண்டல்ல..177 திமிங்கிலங்களை வேட்டையாடி கொன்று குவித்த ஜப்பான் அரசு!

தனது வருடாந்திர வேட்டை நிகழ்வில் 177 திமிங்கிலங்களை வேட்டையாடி கொன்று குவித்துள்ளதாக ஜப்பான் அரசு தற்பொழுது அறிவித்துள்ளது
ஒன்றல்ல..இரண்டல்ல..177 திமிங்கிலங்களை வேட்டையாடி கொன்று குவித்த ஜப்பான் அரசு!

டோக்யோ: தனது வருடாந்திர வேட்டை நிகழ்வில் 177 திமிங்கிலங்களை வேட்டையாடி கொன்று குவித்துள்ளதாக ஜப்பான் அரசு தற்பொழுது அறிவித்துள்ளது

தீவு நாடான ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்நிலையில் ஜப்பானைப் பொறுத்த வரை பலவேறு காரணங்களுக்காக ஆண்டுதோறும் அந்தப் பகுதிகளில் அதிகாரப்பூர்வமாக திமிங்கில வேட்டை நடத்துவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது.

திமிங்கில வேட்டை நிறுத்தி வைப்பு தொடர்பாக சர்வதேச திமிங்கில வேட்டை ஆணையத்தின் ஒப்பந்தத்தில் ஜப்பானும் கையெழுத்திட்டுள்ளது. ஆனாலும் அறிவியல் ஆராய்ச்சியின் பொருட்டு திமிங்கிலங்களைக் கொல்லலாம் என்ற அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளில் உள்ள வசதியை பயன்டுத்தி ஜப்பான் இத்தகைய வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

அந்த  வகையில் இந்த ஆண்டுக்கான வேட்டை தற்பொழுது முடிந்துள்ளதாக அரசின் மீன்வளத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரி கோஹி கூறியதாவது:

கடந்த ஜூன் மாதம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மூன்று கப்பல்கள் தற்பொழுது வேட்டை முடிந்து திரும்பியுள்ளன. அவற்றில் இருந்து 43 மிங்கே வகை திமிங்கிலங்களும், 134 செய் வகை திமிங்கிலங்களும் கிடைத்துள்ளன. இந்த வேட்டை மூலம் நடத்தப்படும் ஆராய்ச்சிகளின் விளைவாக நீடித்து அந்த பகுதிகளில் இருக்கும் திமிங்கிலங்களின் எண்ணிக்கையினை துல்லியமாக நம்மால் பெற முடியும். ஜப்பான் மிக விரைவில் வர்த்தகரீதியிலான் திமிங்கில வேட்டையில் ஈடுபட உள்ளதால் இந்த தகவல்கள் அதற்கு உதவும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் நார்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகிய இரு நாடுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக திமிங்கில வேட்டையில் ஈடுபடுகின்றன.

திமிங்கிலத்தினை உணவுக்காக பயன்படுத்தும் பொருட்டே வர்த்தகரீதியிலான திமிங்கில வேட்டையில் ஈடுபட உள்ளதாக ஜப்பான் கூறும் அதே நிலையில், பொதுவாகவே கடந்த சில ஆண்டுகளில் திமிங்கில உணவு மீதான ஜப்பானியர்களின் மோகம் குறைந்து வருவதாகவே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com