வைரலான திருமண புகைப்படத்தால் கம்பி எண்ணப்போகும் தம்பதி: விஷயம் இதுதான்!

இலங்கையில் திருமணம் முடித்த புதுமணத் தம்பதி, ஊர்வலமாக வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. 
வைரலான திருமண புகைப்படத்தால் கம்பி எண்ணப்போகும் தம்பதி: விஷயம் இதுதான்!


இலங்கையில் திருமணம் முடித்த புதுமணத் தம்பதி, ஊர்வலமாக வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. 

இதனால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பும் உருவாகியுள்ளது.

புகைப்படம் வைரலாகப் பரவினால் சிறைத் தண்டனை வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுகிறதா? இல்லை, புகைப்படம் வைரலாகப் பரவியதற்காக இல்லை. அந்த புகைப்படத்தில், அவர்கள் சட்ட விதிகளை மீறியது ஊர் உலகுக்கு அம்பலமானதுதான் காரணம்.

வாருங்கள் என்ன நடந்ததென்று பார்க்கலாம்..
இலங்கையில் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி ஒன்று ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தின் போது, மணப்பெண் அணிந்திருந்த புடவைதான் தற்போது சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது சுமார் மூன்றரை கிலோ மீட்டர் நீளமான புடவையாகும்.

மணப்பெண் சாலையில் ஊர்வலமாக நடந்து செல்லும் போது, இந்த புடவையை பின்னாடியிருந்து பிடித்துக் கொண்டே வர சுமார் 250 பள்ளிச் சிறார்கள் வாடகைக்கு பணியமர்த்தப்பட்டனர். 

அங்குதான் சிக்கலே. இலங்கையின் சட்டப்படி பள்ளிச் சிறார்களை தனியார் நிகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது குற்றம். இந்த திருமணத்துக்காக இரண்டு தனியார் பள்ளிகளின் சிறார்கள் வாடகைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

மணப்பெண்ணின் புடவையை தூக்கி வர பள்ளிச் சிறார்களைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விசாரணை முடிந்தால், மணமக்களுக்கு சுமார் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com