ஒன்றல்ல..இரண்டல்ல. 1000 முட்டைகளைத் திருடிய உணவுத் தொழிற்சாலை காவலாளி! 

சீனாவின் பிங்கு நகரத்தில் உணவுத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் அங்கிருந்து 10000 முட்டைகளைத் திருடிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.       
ஒன்றல்ல..இரண்டல்ல. 1000 முட்டைகளைத் திருடிய உணவுத் தொழிற்சாலை காவலாளி! 

பிங்கு: சீனாவின் பிங்கு நகரத்தில் உணவுத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் அங்கிருந்து 10000 முட்டைகளைத் திருடிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.       

சீனாவின் பிங்கு நகரத்தில் உணவுத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு 'ஹூ' என்பவர் இரவுக் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.  இவர் சமீபத்தில் இரண்டு சூட்கேசுகள் நிறைய உணவுப்பொருட்களைத் திருடிக் கொண்டு தொழிற்சாலையில் இருந்து செல்லும் பொழுது பிடிபட்டுள்ளார். போலீசார் அந்த சூட்கேசில் சோதனை செய்த பொழுது பெரும்பாலும் முட்டைகளே இருந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டினை சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். அங்கு அவர்கள் அதிர்ச்சியடையம் விதமாக  வீடு முழுவதும் ஏறக்குறைய 1000 முட்டைகளுக்கு மேல் இருந்துள்ளன. அத்துடன் இறைச்சித் துண்டுகள், டிஸ்யூ பேப்பர்கள் மற்றும் டிடர்ஜென்ட் பாட்டில்கள் இருந்துள்ளன.

இதனால் அதிர்ச்சியான போலீசார் அவரிடம் விசாரித்த பொழுது, 'தனக்கு முட்டைகள் மிகவும் பிடிக்கும் என்பதால் அவற்றை எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் தான் எத்தனைமுறை திருடி வந்தேன் என்பதே மறந்து விட்டதாகவும், அநேகமாக 100 முறைகளுக்கு மேல் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அந்த வீட்டில் உள்ள பெரும்பாலான பொருட்கள் திருடப்பட்டதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கம்பெனி தரப்பினர், மிகவும் நேர்மையானவர் என்று நினைத்த அவர் இந்த திருட்டில் ஈடுபட்டார் என்பதை நம்ப முடியவில்லை என்றும், இப்படி யார் தொந்தரவம் இல்லாமல் திருடுவதற்கு வசதியாகத்தான், அவர் இரவு பணியினைக் கேட்டு பெற்றிருக்கிறார் என்பது  இப்போதுதான் தெரிகிறது என்றும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com