உலகின் வயது முதிர்ந்த மனிதராக 112 வயதான ஜப்பானியர் அறிவிப்பு

ஜப்பானைச் சேர்ந்த மசாஜோ நுனாகா (Msazo Nonaka) என்ற 112 வயது முதியவர் உலகின் வயது முதிர்ந்த மனிதராக கின்னஸ் அறிவித்துள்ளது. 
உலகின் வயது முதிர்ந்த மனிதராக 112 வயதான ஜப்பானியர் அறிவிப்பு

ஜப்பானைச் சேர்ந்த மசாஜோ நுனாகா (Msazo Nonaka) என்ற 112 வயது முதியவர் உலகின் வயது முதிர்ந்த மனிதராக கின்னஸ் அறிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக வயது முதிர்ந்த மனிதராக 113 வயதுள்ள ஸ்பெயினைச் சேர்ந்த நுனேஸ் ஆலிவேரா கடந்த பிப்ரவரி மாதத்தில் காலமானதை அடுத்து மசாஜோ நுனாகா (112) அறிவிக்கப்பட்டார். 

இவர், ஜப்பானில் உள்ள அஷாரோ என்ற ஊரில் கடந்த 1905-ம் ஆண்டு ஜூலை 25-ல் பிறந்தார். இவர் 1931-ம் ஆண்டு ஹட்ஸ்சுனோ என்ற பெண்ணை மணந்தார். இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். 

சுற்றுலாப் பயணிகளுக்கான இயற்கை வெந்நீர் ஊற்றுகளைக் கொண்ட ரிசார்ட்டை நடத்தி வந்த அவர் தற்போதும் அதில் குளிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இவர் இன்றும் ஆரோக்கியத்துடன் விளங்குவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

நுனாகா நடத்தி வந்த ரிசார்ட்டை தற்போது அவரது பேத்தி நிர்வகித்து வருகிறார். 112 வயதான மசாஜோ நுனாகாவை உலகிலேயே வயது முதிர்ந்தவராக அங்கீகரிப்பதற்கான சான்றிதழை ஜப்பானில் உள்ள கின்னஸ் அமைப்பின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வழங்கினர். 

கின்னஸ் சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சியில், மசாஜோ நுனாகா தனக்கு மிகவும் பிடித்த கேக்கை கேட்டு வாங்கி சுவைத்ததாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com