சீனாவின் அதிநவீன ஜே-10சி போர் விமானங்கள் சேவையில் இணைப்பு

சீனாவின் அதிநவீன ஜே-10சி போர் விமானங்கள் சேவையில் இணைப்பு

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, ரேடார் கண்களுக்குப் புலப்படாத அதி நவீன ஜே-10சி போர் விமானங்களை சீனா தனது விமானப் படை சேவையில் திங்கள்கிழமை இணைத்தது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, ரேடார் கண்களுக்குப் புலப்படாத அதி நவீன ஜே-10சி போர் விமானங்களை சீனா தனது விமானப் படை சேவையில் திங்கள்கிழமை இணைத்தது.
ஒலியைவிட மிக வேகமாகப் பறக்கும் இந்த விமானங்கள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், பல்வேறு நவீன ஆயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டவை ஆகும். இந்த விமானங்கள், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிரிகளின் வான் எல்லைக்குள் ரகசியமாக ஊடுவி, இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் இந்த விமானங்களுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தரை இலக்குகள் மட்டுமின்றி, கடலிலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட இந்த விமானங்கள், குறுகிய தொலைவு மற்றும் நடுத்தரத் தொலைவுப் பகுதிகளில் தாக்குதல் தொடுக்கக் கூடியவை என்று சீன விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நான்காம் தலைமுறையைச் சேர்ந்த ஜே-20 ரக ராடார் மறைவு போர் விமானங்கள் சீன விமானப் படையில் கடந்த பிப்ரவரி மாதம் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்கள், நடுத்தர மற்றும் தொலைதூர இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இதுவும் ஒலியை விட அதிக வேகத்தில் பறக்கக் கூடியது.
இந்த நிலையில், தற்போது ஜே-10சி விமானமும் விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது, வான் பாதுகாப்பில் சீனாவின் பலத்தை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com