ஈராக்கில் ஐ.எஸ். அமைப்போடு தொடர்புடைய 300 க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை! 

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய 300 க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
ஈராக்கில் ஐ.எஸ். அமைப்போடு தொடர்புடைய 300 க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை! 

பாக்தாத்:  ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய 300 க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர்.  குறிப்பாக அந்த நாட்டின் மூன்றிலொரு பங்கு அவர்களது கட்டுப்பாட்டிலிருந்து வந்தது. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பரில் ஐ.எஸ். அமைப்பினரை முழுமையாக வென்று விட்டோம் என ஈராக் அரசு அறிவித்தது.

இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய 300 க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

இதுபற்றி அந்நாட்டு நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரியில் இருந்து 97 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 185 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள். இவர்கள் அனைவரும் துருக்கி மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்பொழுது மொசூல் நகர் அருகே டெல் கீப் பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் 212 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  150 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  341 பேருக்கு பிற சிறை தண்டனைகளும் விதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com