தெரியாமல் கைப்பையில் வைத்திருந்த ஆப்பிளுக்கு ரூ.33000 அபராதம்! 

விமானப் பயணத்தின் பொழுது அளிக்கப்பட்ட ஆப்பிள் ஒன்றை தெரியாமல் கைப்பையில் வைத்திருந்த பெண் ஒருவருக்கு, ரூ.33000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
தெரியாமல் கைப்பையில் வைத்திருந்த ஆப்பிளுக்கு ரூ.33000 அபராதம்! 

வாஷிங்டன்: விமானப் பயணத்தின் பொழுது அளிக்கப்பட்ட ஆப்பிள் ஒன்றை தெரியாமல் கைப்பையில் வைத்திருந்த பெண் ஒருவருக்கு, ரூ.33000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

கிரிஸ்டல் டெட்லாக் என்ற அமெரிக்கப் பெண்மணி பாரிஸிலிருந்து அமெரிக்காவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவன விமானத்தில் வந்துள்ளார். பயணத்தின் பொழுது அவருக்கு தின்பண்டமாக ஆப்பிள் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது அதனை சாப்பிட விரும்பாத அவர், அடுத்து மினபோலிஸ் மாகாணத்திலிருந்து டென்வர் மாகாணத்திற்கு மாறிச் செல்ல வேண்டிய தனது  விமான பயணத்தின் பொழுது அதனைச் சாப்பிடலாம் என்று கருதி தனது கைப்பையில் வைத்துக் கொண்டுள்ளார். 

ஆனால் மினபோலிஸ் விமான நிலையத்தில் வந்து இறங்கியவர், அமெரிக்க எல்லை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய 'எதேச்சையான' சோதனையின் பொழுது சிக்கலுக்கு உள்ளானர். அந்த மாகாண விதிகளின் படி விவசாய விளைபொருட்கள் எதுவும் கையில்  வைத்திருந்தால் அதனை முன்னதாக தெரிவிக்க வேண்டும். ஆனால் கிரிஸ்டல் அந்த ஆப்பிளை பெரிதாக கருதாத காரணத்தால் எதுவும் கூறவில்லை.

எனவே அவர் சோதனைஅதிகாரியிடம் நான் இப்பொழுது அந்த ஆப்பிளை தூக்கி எறிந்து விட வேண்டுமா அல்லது சாப்பிட்டு விடலாமா என்று கேட்டுள்ளார். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக கிரிஸ்டலுக்கு அந்த எல்லை மற்றும் சுங்கத் துறை  அதிகாரி 500 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33000) அபராதம் விதித்துள்ளார்.

இதனால் அதிர்ந்து போன கிரிஸ்டல் இந்த அபராதத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com