அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளில் முன்னிலை பெறும் பாகிஸ்தான்: எச்சரிக்கும் நிபுணர்

அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளில் 3வது இடத்தைப் பிடிக்க பாகிஸ்தான் செய்து வரும் காரியங்கள் தெற்காசிய அமைதிக்கு உலை வைக்கும் என்று உலக நலனை விரும்பும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளில் முன்னிலை பெறும் பாகிஸ்தான்: எச்சரிக்கும் நிபுணர்

 
வாஷிங்டன்: அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளில் 3வது இடத்தைப் பிடிக்க பாகிஸ்தான் செய்து வரும் காரியங்கள் தெற்காசிய அமைதிக்கு உலை வைக்கும் என்று உலக நலனை விரும்பும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

5 முதல் 10 கிலோ டன் எடை கொண்ட குறைந்த தூரத்தைத் தாக்க வல்ல அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் பாகிஸ்தான் காட்டி வரும் ஆர்வம், தெற்காசிய நாடுகளிடையேயான எதிர்கால அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வரலாறு மற்றும் உலக மேம்பாடு தொடர்பாக புத்தகங்கள் எழுதியவரும், சிறப்பான பேச்சாளருமான வி. ஜோசப், மிலிட்டரி.காம் என்ற இணையதளத்தில் எழுதியிருக்கும் கட்டுரையில், இது பற்றி மிக விரிவாக அலசப்பட்டுள்ளது.

அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருவது, பயங்கரவாதிகளின் கையில் அணு ஆயுதங்கள்  சென்று சேருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, அது பாகிஸ்தானுக்கும், உலகின் பிற நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று நேரடியாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டுரையில் பாகிஸ்தானின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால், பாகிஸ்தானுக்கும் ஆப்கானின் தாலிபான், தெஹ்ரீக் - இ - ஜியாத் இஸ்லாமி, ஜெய்ஷ் - இ - முகம்மது, லஷ்கர் - இ - தயிபா அல்லது ஹிஸ்புல் முஜாகிதீன் என இன்னும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையேயான உறவு வலுவாக இருந்தது தெரிய வரும். இந்த உறவுகளால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான நட்புறவு பாதிக்கப்பட்டதும் உலகறியும்.

இதே காரணத்தால்தான் பாகிஸ்தான் - அமெரிக்கா இடையேயான நல்லுறவு சிதைந்து போனது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு முறிந்து போனது, அதோடு நின்றுவிடாமல், இந்தியா - சீனா உறவிலும் விரிசலை ஏற்படுத்தி, தெற்காசியாவில் நிரந்தர அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சென்று கொண்டிருக்கிறது என்று எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com