நாளிதழ் கட்டுரைகளுக்கு மக்களின் கருத்தை மாற்றும் சக்தி உண்டு: அமெரிக்க ஆய்வில் தகவல்

நாளிதழ்களில் தலையங்கப் பக்கத்துக்கு எதிரே வெளியாகும் கட்டுரைகளுக்கு மக்களின் கருத்தை மாற்றும் சக்தி உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாளிதழ்களில் தலையங்கப் பக்கத்துக்கு எதிரே வெளியாகும் கட்டுரைகளுக்கு மக்களின் கருத்தை மாற்றும் சக்தி உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
 நாளிதழ்களில் தலையங்கம் மற்றும் அதற்கு அடுத்த பக்கங்களில் அப்போதைய அரசியல், பொருளாதார, சமுகப் பிரச்னைகள் குறித்து கட்டுரைகள் வெளியாவது வழக்கம். இந்தக் கட்டுரைகளுக்கு பெருவாரியான வாசகர்களும் உண்டு. இந்நிலையில் நாளிதழ்களில் வெளியாகும் இந்தக் கட்டுரைகள் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் அரசியல் அறிவியல் பத்திரிகை ஆய்வு நடத்தியது. அமெரிக்காவைச் சேர்ந்த "நியூயார்க் டைம்ஸ்' உள்ளிட்ட முன்னணி நாளிதழ்கள், இதில் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 தொடக்கத்தில் ஒரு சில நாளிதழ்களில் மட்டுமே தலையங்கப் பக்கத்திலும், அதன் எதிர்ப்பக்கத்திலும் கட்டுரைகள் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது அந்தக் கட்டுரைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதால் பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களும் இதுபோன்ற கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. அதில் அன்றாட அரசியல், பொருளாதார நிகழ்வுகள், சமூகப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கட்டுரைகள் வருகின்றன. பெரும்பாலும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த வல்லுநர்களால் இந்தக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.
 இந்த கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வரும் 3,567 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், அரசியல் நிகழ்வுகள், சமூகப் பிரச்னைகளில் மக்களின் கருத்துகளை பிரதிபலிப்பதாக நாளிதழ் கட்டுரைகள் விளங்குகின்றன. மேலும், ஒரு விஷயம் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் கருத்தை மாற்றும் அளவுக்கு அக்கட்டுரைகள் வலுவானதாகவும், புதிய தகவல்களுடன் உள்ளன.
 அக்கட்டுரைகளில் உள்ள கருத்துகள் சில நமது எண்ணத்தில் இருந்து மாறுபட்டதாக இருந்தாலும், காலப்போக்கில் அக்கட்டுரையில் கூறப்பட்டது சரிதான் என்பது தெரியவருகிறது. இதன் மூலம், தங்கள் கருத்துக்கு மாற்றாக கட்டுரையில் இருக்கும் கருத்துகளை ஏற்றுக் கொள்வதாக பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com