பத்திரிகை சுதந்திரம்: இந்தியாவுக்கு 138-ஆம் இடம்

பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138-ஆம் இடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு இடங்கள் இந்தியா பின்னுக்கு வந்துள்ளது.

பத்திரிகைகளுக்கு சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138-ஆம் இடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு இடங்கள் இந்தியா பின்னுக்கு வந்துள்ளது.
 பத்திரிகை சுதந்திரத்தில் நார்வே இரண்டாம் முறையாக முதலிடத்தில் உள்ளது. பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறைகளைக் கையாளும் நாடுகளில் வட கொரியா முன்னணியில் உள்ளது.
 மொத்தம் 180 நாடுகளைக் கணக்கில் கொண்டு பத்திரிகை சுதந்திரத்துக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியா பின்னடைவை சந்தித்ததற்கு, செய்தியாளர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் பேச்சுகளும், சில வன்முறைகளுமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு எதிராக இந்துத்வா ஆதரவாளர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் மிகக் கடுமையாக உள்ளதாக கூறப்படுகிறது.
 மத்தியில் ஆளும் கட்சியையோ அல்லது இந்துத்வா கொள்கையை விமர்சித்தோ ஏதேனும் கூறப்படுமானால், "பிரைம் மினிஸ்டர்ஸ் ட்ரோல் ஆர்மி' என்பவர்களிடம் இருந்து இணையதளத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்புவதாகவும், சம்பந்தப்பட்ட எழுத்தாளரையோ அல்லது செய்தியாளரையோ கொலை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்துவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையை கையாள்வதில் வட கொரியாவை தொடர்ந்து எரிடேரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா, சீனா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
 சீனாவில் பத்திரிகையாளர்களை கடுமையாக கண்காணிப்பதாகவும், வெளிநாட்டு செய்தியாளர்கள் பணிபுரிய முடியாத சூழல் நிலவுவதாகவும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிரும் பொதுமக்களை கூட கைது செய்யுமளவு மோசமான நிலைமை இருப்பதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com