வர்த்தகம், முதலீடுகள்: இருதரப்பு உறவை மேம்படுத்த இந்தியா-மங்கோலியா முடிவு

வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இந்தியா-மங்கோலியா இடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்துவதென இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
வர்த்தகம், முதலீடுகள்: இருதரப்பு உறவை மேம்படுத்த இந்தியா-மங்கோலியா முடிவு

வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இந்தியா-மங்கோலியா இடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்துவதென இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
 இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 2 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை மங்கோலியா சென்றார். இந்நிலையில், அவரும், மங்கோலிய வெளியுறவு அமைச்சர் சோக்பாதரும் இருதரப்பு உறவுகளில் பல்வேறு விவகாரங்கள் குறித்து புதன்கிழமை ஆலோசித்தனர்.
 அப்போது, அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, ஆற்றல், சேவைகள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
 மேலும், இந்தியத் தலைநகர் தில்லி-மங்கோலியத் தலைநகர் உலான்பாதர் இடையே நேரடி விமானப் போக்குவரத்து தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. பின்னர் சுஷ்மா-சோக்பாதர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:
 இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் ஆர்வம் உள்ள துறைகளில் புதிதாக ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்புகளை கண்டறிவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், பயங்கரவாதம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களையும், அவற்றுக்கு சாதகமானவர்கள் அளிக்கும் ஆதரவையும் சர்வதேச அரங்கில் ஒருங்கிணைந்து முறியடிப்பதென ஒப்புக்கொள்ளப்பட்டது.
 இந்தியாவின் கடனுதவியில் மங்கோலிய அரசு மேற்கொண்டு வரும் சுத்திகரிப்பு திட்டம் உள்பட, இருதரப்பும் ஒருங்கிணைந்துள்ள திட்டங்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்தத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு நமது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. மங்கோலியாவானது, தனது செழிப்பான இயற்கை வளம் மற்றும் வளர்ச்சிக்கான ஆர்வத்தின் மூலமாக இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியக் கூட்டாளியாக இருக்க முடியும். கிழக்கு ஆசியாவில் முக்கியப் பங்காற்றும் மங்கோலியாவின் சமூக, பொருளாதார மேம்பாடானது, அந்தப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் செழிப்புக்கு முக்கியமானதாகும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
 கடந்த 42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-மங்கோலியா இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு சுமார்
 ரூ.171.40 கோடியாகும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com