குடியரசு தின விழாவுக்கு டொனால்டு டிரம்ப்-க்கு அழைப்பு விடுத்த இந்தியா

குடியரசு தின விழாவுக்கு டொனால்டு டிரம்ப்-க்கு அழைப்பு விடுத்த இந்தியா

அடுத்தாண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க சிறப்பு வருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க சிறப்பு வருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது நாட்டின் கலாசாரம், பண்பாடு மற்றும் ராணுவம், கப்பல்படை மற்றும் விமானப்படை என முப்படை அணிவகுப்பு ஆகியவை நடைபெறும். இந்த தருணத்தின் போது ஏதேனும் ஒரு நாட்டைச் சேர்ந்த முக்கிய தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்படும்.

அவ்வகையில், 2019-ஆம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க உள்துறை செயலர் மைக் போம்பே மற்றும் பாதகாப்பு செயலர் ஜேம்ஸ்.என்.மேட்டீஸ் ஆகியோர் அடுத்த மாதம் இந்தியா வந்தபின்னர் அங்கு நடைபெறவுள்ள இருநாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்து குடியரசு தின விழாவுக்கு அமெரிக்க அதிபர் கலந்துகொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று  அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2018-ஆம் ஆண்டுக்கான குடியரசு தின விழாவின் போது ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அதுபோல கடந்த 2015-ஆம் ஆண்டு 65-ஆவது குடியரசு தின விழாவின் போது அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com