ஆஸ்திரேலிய மாஸ்டர் செஃப் சமையல் போட்டியில் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் வென்ற தமிழர்!

சஷி செல்லையா என்பவர் ஆஸ்திரேலியாவில் குடி பெயர்ந்த இந்தியர் ஆவார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த
ஆஸ்திரேலிய மாஸ்டர் செஃப் சமையல் போட்டியில் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் வென்ற தமிழர்!

சஷி செல்லையா (39), என்பவர் ஆஸ்திரேலியாவில் குடி பெயர்ந்த இந்தியர் ஆவார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவரது பூர்விகம் மதுரை. கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார்

அடிலைடைலில் உள்ள சிறைச்சாலையில் பாதுகாவலராக தற்போது பணிபுரிந்து வரும் சஷி அண்மையில் 'ஆஸ்திரேலியா மாஸ்டர் செஃப் 2018' என்கிற சமையல் போட்டியில் கலந்து கொண்டார். அந்தப் போட்டியின் முதல் சுற்றில் ஸ்டார்டர் வகை உணவாக சம்பல் இறால் எனும் உணவைச் சமைத்து, 30 புள்ளிகள் எடுத்தார். பின்னர் இறுதிச் சுற்றில் மீன் குழம்புடன் சேர்த்து சீரகச் சாதம் சமைத்து மொத்தமாக 93 புள்ளிகளை எடுத்து வெற்றி பெற்று சாதனை படைத்தார். அவருடன் போட்டியிட்டு பென் என்பவர் மொத்தமாக 77 புள்ளிகள் எடுத்திருந்தார்.

மாஸ்டர் செஃப் என்ற பட்டமும், ரொக்கப் பரிசாக ஒரு கோடியே 27 லட்சம் ரூபாயும் சஷி செல்லையாவுக்கு வழங்கப்பட்டது. பரிசை வென்ற அவர் இறுதிச் சுற்றில் சமைத்த உணவு தனது அத்தைக்கு பிரியமான உணவு என்றார். ட்விட்டரில் தனக்கு உற்சாகம் அளித்துவரும் தனது குடும்பத்துக்கு நன்றி கூறி பதிவிட்டிருந்தார் சஷி.

சஷியை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்ந்து வரும், இந்தியர்கள் அவரது வெற்றி தங்களுக்கு பெருமையளிக்கிறது என்று பதிலுக்கு வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com