யேமனில் சவூதி கூட்டுப்படை தாக்குதல்: விசாரணை நடத்த ஐ.நா வலியுறுத்தல்

யேமனில் சவூதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா சபை விசாரணை நடத்த
யேமனில் சவூதி கூட்டுப்படை தாக்குதல்: விசாரணை நடத்த ஐ.நா வலியுறுத்தல்


யேமனில் சவூதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா சபை விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளது.

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் அரசு படைக்கு ஆதரவாகவும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.  

யேமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் சடா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். அவர்கள் ஹூதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், யேமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹூதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவூதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில், சடா நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்திய தாக்குதலில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 29 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக யேமனில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், யேமன் நாட்டில் சவூதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பேருந்தில் சென்ற 29 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா சபை விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளது.

யேமனில் ஒரு சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலை கண்டித்து "ஒரு சுதந்திரமான மற்றும் உடனடி விசாரணை தேவை என்று என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தமது கடமைகளை மதிக்க வேண்டும். குறிப்பாக, வேறுபாட்டின் அடிப்படை விதிகள், விகிதாச்சாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, "இராணுவ நடவடிக்கைகளை நடத்துவதில் பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் பொருட்களை காப்பாற்ற அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்துகிறார்" என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரே வழியாக ஈரான் உரையாடலை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுக்கான வேண்டும் என தனது அழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com