ஆக. 18-இல் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு 

ஆகஸ்டு 18-ஆம் தேதி பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பதவியேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆக. 18-இல் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு 

ஆகஸ்டு 18-ஆம் தேதி பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பதவியேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி 116 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து மொத்தமுள்ள 342 இடங்களில் 172 உறுப்பினர்களின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. எனவே முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் (65), பாகிஸ்தான் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், ஆகஸ்டு 18-ஆம் தேதி அவர் பிரதமராக பதவியேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் மூத்த தலைவர் ஃபைஸல் ஜாவித் கான் தெரிவித்தார். மேலும், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இம்ரான் கான் தலைமையில் 1992 உலகக் கோப்பை விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் உட்பட மூத்த இந்திய கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை சித்து உறுதிபடுத்தியுள்ளார். இதர வீரர்களின் நிலைப்பாடு குறித்து இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, தனது பதவியேற்பு விழா சனிக்கிழமை (ஆக.11) நடைபெறும் என்று இம்ரான் கான் தெரிவித்திருந்தார். எனினும், புதிய பிரதமர் பதவியேற்பு விழா பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற வேண்டும் என்று இடைக்கால அரசின் பிரதமர் நாஸிருல் முல்க் விரும்புவதாகவும், எனவே, அந்த நாளில்தான் இம்ரான் பதவியேற்பார் என்றும் கூறப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com