பொருளாதாரத் தடை மூலம் மிரட்டல்: அமெரிக்கா மீது துருக்கி குற்றச்சாட்டு

பொருளாதாரத் தடைகள் மூலம் தங்கள் நாட்டை அமெரிக்கா மிரட்டுவதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அமெரிக்க அறிவிப்பால் லிராவின் மதிப்பு குறைவதை கவலையுடன் பார்க்கும் முதலீட்டாளர்.
துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அமெரிக்க அறிவிப்பால் லிராவின் மதிப்பு குறைவதை கவலையுடன் பார்க்கும் முதலீட்டாளர்.

பொருளாதாரத் தடைகள் மூலம் தங்கள் நாட்டை அமெரிக்கா மிரட்டுவதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃப் சனிக்கிழமை மேற்கொண்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:
பொருளாதாரத் தடைகள் மூலம் சக நேட்டோ உறுப்பு நாடான துருக்கிக்கே சிரமத்தை விளைவித்து, அதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குதூகலிப்பது, வெட்கக் கேடானது செயல் ஆகும்.
பொருளாதாரத் தடைகள் விதித்து, அதன் மூலம் பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் பழக்கத்துக்கு அமெரிக்கா அடிமையாகிவிட்டது. அந்தப் பழக்கத்திலிருந்து அந்த நாடு மீண்டு வர வேண்டும்.
இல்லையென்றால், உலக நாடுகள் ஒருங்கிணைந்து அமெரிக்காவை வழிக்குக் கொண்டு வர வேண்டியிருக்கும்.
அதற்காக, வெறும் கண்டன அறிக்கைகளை மட்டும் அந்த நாடுகள் வெளியிட்டுக் கொண்டிருக்காது.
துருக்கியைப் பொருத்தவரை, அமெரிக்காவுக்கு எதிராக அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து ஏற்கெனவே செயல்பட்டிருக்கிறோம். அதனை மீண்டும் செயல்படுத்திக் காட்டத் தயங்க மாட்டோம் என்று தனது சுட்டுரைப் பதிவில் முகமது ஜாவத் ஸரீஃப் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியில், ராணுவம் மற்றும் காவல்துறையின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஈடுபட்டனர்.
எனினும், அந்த முயற்சியை அரசுப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. இந்த சம்பவத்தில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ள மதத் தலைவர் ஃபெதுல்லா குலென் தூண்டி விடுவதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது. எனினும், அமெரிக்காவும், குலெனும் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக துருக்கியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் அமெரிக்க கிறிஸ்துவ மதபோதகரான ஆண்ட்ரூ பிரன்ஸன் என்பவரை அந்த நாட்டு போலீஸார் கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்தனர்.
குர்து இனத்தவரை கட்டாய மதமாற்றம் செய்ததாகவும், துருக்கி அரசுக்கு எதிராக உளவு வேலைகளைச் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆண்ட்ரூ பிரன்ஸனை விடுதலை செய்யாவிட்டால் துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக்கேல் பென்ஸ் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கியுள்ளதாக அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இதையடுத்து, துருக்கி பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு, அந்த நாட்டு கரன்சியான லிராவின் மதிப்பு சரிந்தது.
இந்தச் சூழலில்தான், துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com