இத்தாலியில் பாலம் உடைந்து விழுந்து பெரு விபத்து: 37 பேர் பலி 

இத்தாலியில் உள்ள முக்கியமான பாலம் ஒன்று உடைந்து விழுந்த பெரு விபத்தில் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தாலியில் பாலம் உடைந்து விழுந்து பெரு விபத்து: 37 பேர் பலி 

ரோம்: இத்தாலியில் உள்ள முக்கியமான பாலம் ஒன்று உடைந்து விழுந்த பெரு விபத்தில் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியின் முக்கியமான வணிக நகரங்களில் ஒன்று ஜெனோவா. இங்குள்ள பிரதான சாலையில் 1960-ஆம்  ஆண்டு கட்டப்பட்ட மொராண்டி பாலம் உள்ளது. அருகில் உள்ள சிறு துறைமுகங்களில் இருந்து சரக்குகளை கொண்டு செல்வதற்கான முக்கிய இணைப்புச்சாலையில்தான் இந்தப் பாலம் அமைந்துள்ளது.

தற்பொழுது அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. உள்ளூர் நேரப்படி செவ்வாய் நண்பகல் சமயத்தில் மொராண்டி பாலத்த்தின் குறிப்பிட்ட 100 மீட்டர் அளவுள்ள பகுதி இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்த சமயத்தில் 30 முதல் 35 கார்களும், மூன்று பெரிய வாகனங்களும் அதன் மீது இருந்துள்ளன. பாலத்தின் உடைந்த பாகங்கள் கீழே உள்ள ரயில் தணடவாளம், ஆறு மற்றும் அருகில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றின் மீது விழுந்துள்ளன. பின்னர் நாடு முழுவதும் இருந்து சுமார் 250 மீட்பு படை வீரர்கள் வந்து பாலத்தின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  

இதுதொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் மேட்டியோ சால்வினி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

மொராண்டி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று குழநதைகள் உட்பட 37 பேர் பலியாகியுள்ளனர். விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com