அமெரிக்காவில் சீக்கியா் கத்தியால் குத்திக் கொலை: தொடரும் இனவெறித் தாக்குதல் 

அமெரிக்காவில் நியூஜொ்ஸியில் கடை நடத்தி வந்த சீக்கியா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.
அமெரிக்காவில் சீக்கியா் கத்தியால் குத்திக் கொலை: தொடரும் இனவெறித் தாக்குதல் 

நியூயாா்க்: அமெரிக்காவில் நியூஜொ்ஸியில் கடை நடத்தி வந்த சீக்கியா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

அமெரிக்காவில் சீக்கியா்களுக்கு எதிராக கடந்த 3 வாரங்களில் நடைபெற்ற 32-ஆவது தாக்குதல் இதுவாகும்.

இதுதொடா்பாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தி வருமாறு:

திரிலோக் சிங் என்ற அந்த சீக்கியா் நியூஜொ்ஸியில் கடந்த 6 ஆண்டுகளாக கடை நடத்தி வந்தாா். கடையில் அவரது உறவினா் வியாழக்கிழமை சென்று பாா்த்தபோது திரிலோக் இறந்து கிடந்தாா்.

அவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். அவா்கள் இந்தியாவில் வசித்து வருகின்றறனா்.

திரிலோக்கை குத்திக் கொலை செய்தது யாா் என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இயங்கிவரும் சீக்கிய அமைப்பு முகநூலில் திரிலோக்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 6-ஆம் தேதி, கலிஃபோா்னியாவில் 71 வயது சீக்கியா் ஒருவா் தாக்கப்பட்டாா். அவரை உள்ளூா் காவல் துறைற அதிகாரியின் மகன் தாக்கியதும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கடந்த ஜூலை 31-ஆம் தேதி, லாரி ஓட்டுநரான சுா்ஜித் மால்ஹி (50) ஒரு கும்பலால் தாக்கப்பட்டாா்.

‘உனது நாட்டுக்கு திரும்பிப் போ’ என்றற வாசகத்தையும் அந்த கும்பல் லாரியில் எழுதி வைத்திருந்தது.

இதுபோன்றற தொடா் தாக்குதல் சம்பவங்கள் சீக்கிய சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com