பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்வு 

பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்வு 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி 116 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து மொத்தமுள்ள 342 இடங்களில் 172 உறுப்பினர்களின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. எனவே முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் (65), பாகிஸ்தான் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், ஆகஸ்டு 18-ஆம் தேதி அன்று அவர் பிரதமராக பதவியேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் மூத்த தலைவர் ஃபைஸல் ஜாவித் கான் தெரிவித்தார்.

அதன்படி பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெள்ளியன்று அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com