பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் சனிக்கிழமை (ஆக. 18) பதவியேற்றுக்கொண்டார்.
பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் சனிக்கிழமை (ஆக. 18) பதவியேற்றுக்கொண்டார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) தலைவருமான இம்ரான் கானை (65) அந்த நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்தது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃபை விட 80 வாக்குகள் அதிகம் பெற்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் இம்ரானின் பிடிஐ கட்சி 116 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. அந்தக் கட்சிக்கு அடுத்தபடியாக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 64 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களையும் கைப்பற்றின.

இந்நிலையில் சிறிய கட்சிகள், சுயேச்சைகள், நியமன எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இம்ரான் கான் இறங்கினார். அவரது கட்சிக்கு பெண்கள் உறுப்பினருக்கான 28 இடங்களும், சிறுபான்மையினருக்கான 5 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும், 9 சுயேச்சை உறுப்பினர்களும் இம்ரான் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்தச் சூழலில், 176 எம்.பி.க்களின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பி.க்களின் ஆதரவே தேவை என்ற நிலையில் அவருக்கு 4 வாக்குகள் கூடுதலாகவே கிடைத்துள்ளன. பாகிஸ்தான் வரலாற்றில், ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com