இலங்கை அதிபராக மீண்டும் பதவியேற்பேன்: ராஜபட்ச 

இலங்கை அதிபராக 3ஆவது முறையாக மீண்டும் பதவியேற்பேன் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபராக மீண்டும் பதவியேற்பேன்: ராஜபட்ச 

இலங்கை அதிபராக 3ஆவது முறையாக மீண்டும் பதவியேற்பேன் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு அருகே உள்ள பிலியாண்டாலாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை இதுகுறித்து அவர் கூறுகையில், "தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எண்ணம் எனக்கு உள்ளது' என்றார்.
இலங்கை அதிபராக சுமார் 10 ஆண்டுகாலம் ராஜபட்ச பதவி வகித்துள்ளார். இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் மைத்ரிபால சிறீசேனாவிடம் ராஜபட்ச தோல்வியடைந்தார். இதேபோல், பிரதமர் பதவித் தொடர்பான தேர்தலிலும் ராஜபட்ச தோல்வியடைந்தார்.
இதையடுத்து, இலங்கை அதிபராக பொறுப்பேற்ற சிறீசேனா, ஒருவர் இருமுறை மட்டுமே அதிபராக பதவி வகிக்கும் வகையிலும், 3ஆவது முறையாக அதிபராவதை தடை செய்யும் வகையிலும் 2015ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். இதன்படி, 2 முறை அதிபராக பதவி வகித்துள்ள ராஜபட்ச போன்றோரால், 3ஆவது முறையாக அதிபராக முடியாத நிலை நேரிட்டுள்ளது.
முன்னதாக, 3ஆவது முறையாக ஒருவர் அதிபராவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ராஜபட்ச கடந்த 2010ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்திருத்தம் மூலம் ரத்து செய்தார். எனினும், ராஜபட்சவின் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யும் வகையில் சிறீசேனா 2015ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்.
3ஆவது முறையாக அதிபராக தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ராஜபட்ச பதிலளிக்கையில், "19ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி, ஏற்கெனவே 2 முறை அதிபராக பதவி வகித்துள்ள ஒருவர், 3ஆவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் எனது கட்சி கேட்கவுள்ளது' என்றார்.
செய்தியாளர் ஒருவர் கடத்தி தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில், ராஜபட்சவிடம் இலங்கை போலீஸார் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். இதனால், ராஜபட்ச மீண்டும் அரசியலுக்கு திரும்புவது, அதிபர் சிறீசேனாவின் சுதந்திரா கட்சிக்கு புதிய சவாலாக இருக்கும் என்று தெரிகிறது. 
அதேநேரத்தில், ராஜபட்சவின் ஸ்ரீலங்கா பொதுஜனா பெரமுனா கட்சியில் இருப்போர், ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சவை அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அதிபர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com