காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண புதிய திட்டம் வகுக்கும் இம்ரான் கான் அரசு 

காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பான திட்டத்தை பாகிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசு வகுத்து வருகிறது.
காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண புதிய திட்டம் வகுக்கும் இம்ரான் கான் அரசு 

இஸ்லாமாபாத்: காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பான திட்டத்தை பாகிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசு வகுத்து வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு மனித உரிமைகள் துறை அமைச்சா் ஷெரீன் மஸாரி கூறியதாவது:

காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பான திட்டத்தை இம்ரான் கான் அரசு வகுத்து வருகிறறது. அந்தத் திட்டம், இன்னும் ஒரு வாரத்துக்குள் தயாரிக்கப்பட்டு விடும். இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அந்தத் திட்டத்தை அளித்து, அவா்களின் கருத்துகளை பாகிஸ்தான் அரசு கேட்டறியும்.

பின்னா் மத்திய அமைச்சரவை, பிரதமா் இம்ரான் கான் ஆகியோரின் ஒப்புதலுக்காக திட்டம் சமா்ப்பிக்கப்படும். அவா்களின் ஒப்புதல் கிடைத்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சுதந்திர பாகிஸ்தானில் அதிக ஆண்டுகள் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியே நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட கொள்கைகளை வகுப்பதிலும் ராணுவமே முக்கிய பங்காற்றி வருகிறது. அத்தகைய பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமைச்சா் ஷெரீன் மஸாரி மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறாா். அவா் தற்போது காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பான திட்டத்தை பாகிஸ்தான் அரசு வகுத்து வருவதாக தெரிவித்திருப்பது எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com