சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஊழியர்கள் அனைவரும் அவசரமாக
சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!


நியூயார்க்: சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஊழியர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனம் சிஎன்என். இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக நியூயார்க் உட்பட பல்வேறு இடங்களில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நியூயார்க்கில் உள்ள டைம் வார்னர் கட்டடத்தின் அலுவலகத்தில் ஊழியர்கள் அனைவருக்கும், தங்களுடைய நேரடி ஒளிபரப்பை செய்து கொண்டிருந்த நேரத்தில், நேற்று வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி (இரவு 10 மணியளவில்) தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், அலுவலக கட்டடத்தில் ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.  

தொலைபேசியில் வெண்டிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் எச்சரிக்கையை அடுத்து அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் கட்டடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.  

இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரவு 10.30 மணியளவில் விரைந்து வந்த போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அந்த பகுதியின் 58வது தெரு, 8 மற்றும் 9வது அவென்யூ பகுதிகளில் அனைத்து வாகனம் மற்றும் பாதசாரிகள், போக்குவரத்து வாகனங்கள் செல்வதற்கு தடை செய்தனர். 

பின்னர், அலுவலகம் முழுவதும் தேடியதில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. 

இதையடுத்து சிஎன்என் செய்தி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிரச்னை எதுவும் இல்லை. வழக்கம் போல் காலை அலுவலகம் வரலாம் எனவும் குறுந்தகவல் அனுப்பியது. 

தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிஎன்என் நிறுவன கட்டிடத்திற்கு வெளியே வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com