கூகுளில் இடியட் என்றால் டொனால்ட் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன்? சுந்தர் பிச்சையிடம் கேள்வி

கூகுளில் இடியட் என்று டைப் செய்ததும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் வருவது ஏன் என்று சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கூகுளில் இடியட் என்றால் டொனால்ட் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன்? சுந்தர் பிச்சையிடம் கேள்வி


வாஷிங்டன்: கூகுளில் இடியட் என்று டைப் செய்ததும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் வருவது ஏன் என்று சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அமெரிக்க நீதிமன்ற குழு முன்பு இன்று நடைபெற்ற விசாரணையின் போது, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை நேரில் விளக்கங்களை அளித்தார்.

அப்போது அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், "தற்போது வரை கூகுளில் இடியட் என்று தேடினால் டொனால்ட் டிரம்பின் புகைப்படங்கள் வருகின்றன. இது எப்படி நிகழ்ந்தது? இதில் தேடல் எப்படி நிகழ்கிறது?"  என்று சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, பல லட்சம் கீ வேர்டுகளின் அடிப்படையில்தான் இந்த கூகுள் தேடல் நடைபெறுவதாகவும், தொடர்பு விஷயங்கள், புகழ்பெற்றவை, மற்றவர்கள் தேடுதலை பயன்படுத்தும் விதம் என தேடுதலில் இருக்கும் 200 உள்கட்டமைப்புகள் தொடர்பாகவும் சுந்தர் பிச்சை விளக்கினார். 

"எனவே, ஏதோ ஒரு சாதாரண மனிதன் திரைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு பயனாளர்களுக்கு எதைக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்வதில்லை அல்லவா?" என்று மாகாண உறுப்பினர் கேட்டார். 

மேலும், ஜனநாயகக் கட்சியினர், பல நாட்களாக, கூகுள் ஒரு அரசியல் நிலைப்பாட்டுடன் நடந்து கொள்வதாக எழுந்த குற்றச்சாட்டினையும் சுந்தர் பிச்சை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com