நாம் இருவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்: அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால்

கூகுள் வலைதள நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையும், தாமும் இந்தியாவின் ஒரே மாநிலத்தில் (தமிழகம்) பிறந்தவர்கள் என்பதை இந்திய
நாம் இருவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்: அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால்


கூகுள் வலைதள நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையும், தாமும் இந்தியாவின் ஒரே மாநிலத்தில் (தமிழகம்) பிறந்தவர்கள் என்பதை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் வலைதளப் பயனாளர்களின் ரகசிய விவரங்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து, இது தொடர்பான அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் சுந்தர் பிச்சை நேரில் சென்று விளக்கமளித்தார்.
அப்போது அவரிடம் கேள்விகள் எழுப்பிய அந்த குழுவின் உறுப்பினரான, வாஷிங்டன் 7-ஆவது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரமீளா ஜெயபால், சுந்தர் பிச்சையிடம் கூறியதாவது:
இந்த நேரத்தில், தனிப்பட்ட முறையிலான ஒரு கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்களும், நானும் இந்தியாவின் ஒரே மாநிலத்தில் 
பிறந்தவர்கள். இருவரும் வெவ்வேறு துறைகளில் சாதனை சாதித்து வருகிறோம். நீங்கள் அமெரிக்காவின் பெரிய நிறுவனமொன்றுக்குத் தலைமை வகிக்கிறீர்கள்.
குடியேற்றவாசிகளுக்கு எதிரான சிலர் முழக்கங்கள் செய்தாலும், அவர்களால் இந்த நாட்டுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை இது மெய்ப்பித்துள்ளது. அதற்காக உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
உலகின் முன்னணி தேடுதல் வலைதளமான கூகுளுக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் சுந்தர் பிச்சையும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் முதல் இந்திய வம்சாவளி உறுப்பினரான பிரமீளா ஜெயபாலும் சென்னையில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com