இந்தியாவுடன் மற்றொரு பிரச்னை உருவாவதை விரும்பவில்லை: சீனா

மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விவகாரம் இரு நாட்டுக்கு இடையே மற்றொரு மோதல் தளமாக உருவாவதை தாங்கள்

மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விவகாரம் இரு நாட்டுக்கு இடையே மற்றொரு மோதல் தளமாக உருவாவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.
டோக்கா லாம் எல்லைப் பிரச்னை, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் இந்திய } சீன உறவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், சீனாவின் மேற்கண்ட நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மாலத்தீவு விவகாரம் குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாலத்தீவில் தற்போது நிலவும் சூழல், அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையாகும். அதற்கு, அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும்.
மாலத்தீவு அதிபர் முகமது யாமீனின் சிறப்பு பிரதிநிதியாக சீனாவுக்கு வந்த அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது சயீது, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ}யை சந்தித்து, தற்போதைய சூழல் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மாலத்தீவில் உள்ள சீனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் சயீது கூறினார்.
அதற்கு, "மாலத்தீவின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது; தற்போதைய பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அந்நாட்டின் அரசுக்கு சீனா ஆதரவளிக்கும்' என்று வாங் இ தெரிவித்தார்.
மாலத்தீவின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் என்றார் கெங் சுவாங்.
இதனிடையே, மாலத்தீவு அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விவகாரம் இரு தரப்புக்கும் இடையே மற்றொரு மோதல் தளமாக உருவாவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com