மாலத்தீவு விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை

மாலத்தீவு பிரச்னை மேலும் மோசமாகும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலத்தீவு பிரச்னை மேலும் மோசமாகும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாலத்தீவில் நெருக்கடி நிலையை அமல்படுத்துவதாக அதிபர் யாமீன் கயூம் அண்மையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், முன்னாள்அதிபரும் கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், மாலத்தீவு விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதன் பிறகு ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாலத்தீவில் வன்முறை நிகழ்வதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால், அங்கு அரசியல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தப் பிரச்னை மேலும் தீவிரமடையும் அபாயமும் உள்ளது என்றார். "மாலத்தீவில் அமல்படுத்தியுள்ள அவசர நிலையை அதிபர் யாமீன் கயூம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என்று ஐ.நா. பொது சபைத் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் சீத் ராத் அல் ஹுசைன் இது தொடர்பாகக் கூறுகையில், "மாலத்தீவு அதிபர் யாமீனின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்' என்றார்.
மாலத்தீவில் கடந்த 1}ஆம் தேதி முதல் பிரச்னை நிலவி வருகிறது. எனினும், ஒரு வார காலத்துக்குப் பிறகு இப்போதுதான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசித்துள்ளது. எனினும், இந்த ஆலோசனை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com