ரேடார் கண்களுக்குப் புலப்படாத அதிநவீன போர் விமானம்: சீனப் படையில் இணைப்பு

ரேடாரால் கண்டுபிடிக்க முடியாதத் தொழில் நுட்பம் கொண்ட, அதிநவீன ஜே-20 ரக விமானங்களை சீனா தனது விமானப் படைச் சேவையில் சேர்த்துக் கொண்டுள்ளது.
ரேடார் கண்களுக்குப் புலப்படாத அதிநவீன போர் விமானம்: சீனப் படையில் இணைப்பு

ரேடாரால் கண்டுபிடிக்க முடியாதத் தொழில் நுட்பம் கொண்ட, அதிநவீன ஜே-20 ரக விமானங்களை சீனா தனது விமானப் படைச் சேவையில் சேர்த்துக் கொண்டுள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த விமானத்தை இணைத்துக் கொண்டதன் மூலம், பிராந்திய வான்வெளியில் தனது முன்னணி ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளதாக சீன அரசுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, ரேடார் கண்களுக்குப் புலப்படாத ஜே-20 ரக விமானங்கள், விமானப் படைச் சேவையில் அதிகாரப்பூர்வமான இணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில், அமெரிக்கா மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்களை படைச் சேவைக்குப் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது சீனாவின் ஜே-20 விமானங்களும் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வான்வெளி படை பலச் சமநிலை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது ரஷியாவுடன் இணைந்து எஃப்ஜிஎஃப்ஏ என்ற ரேடார் கண்களை மறைக்கும் அதிநவீன விமானங்களை இந்தியா மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com