வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை

குளிர்கால ஒலிம்பிக்கில் இரு கொரிய நாடுகளுக்கும் இடையில் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ள போதிலும் வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிரான அமெரிக்க மற்றும் தென்கொரிய நாடுகளின் நிலைப்பாட்டில் எந்தவித
தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் சனிக்கிழமை நடைபெற்ற அதிவேக சறுக்கு விளையாட்டை கண்டு ரசிக்கும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்.
தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் சனிக்கிழமை நடைபெற்ற அதிவேக சறுக்கு விளையாட்டை கண்டு ரசிக்கும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்.

குளிர்கால ஒலிம்பிக்கில் இரு கொரிய நாடுகளுக்கும் இடையில் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ள போதிலும் வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிரான அமெரிக்க மற்றும் தென்கொரிய நாடுகளின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணுகுண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தியதையடுத்து கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. 
வடகொரியாவின் இந்த நடவடிக்கையையடுத்து அமெரிக்க உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன.
இந்த சூழ்நிலையில், தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா கலந்து கொள்ள அதன் அதிபர் கிம் ஜோங்-உன் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரிய வீரர்கள் கலந்து கொள்ள இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டது.
குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம்ஜோங் -உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங், வட கொரியாவின் கெளரவத் தலைவர் கிம் யோங்-நாம் ஆகியோர் தென் கொரியாவுக்கு அண்மையில் வந்தனர். அப்போது, நல்லிணக்கப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அழைப்பு விடுத்த கடிதத்தை அவரது சகோதரி தென் கொரியாவிடம் ஒப்படைத்தார்.
அதிபர் கிம் ஜோங்-உன்னின் இந்த ராஜதந்திர நடவடிக்கை வட கொரியா மீதான சர்வதேச தடைகள் தளர்வதற்கு வழிவகுக்கும் என்றும் சியோல் மற்றும் வாஷிங்டன் கூட்டணியின் வலுவை குறைக்கும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிரான தென்கொரியாவுடனான எங்களின் கூட்டணி எப்போதும்போல் வலுவான நிலையில் தொடரும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது:
வட கொரியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை திட்டங்களை உடனடியாக கைவிடவேண்டும். அதுவரையில், அந்த நாட்டின் மீது பொருளாதார ரீதியிலும், ராஜதந்திர ரீதியிலும் தனிமைப்படுத்த எடுத்த நடவடிக்கையை, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதில், பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com