தொழில்நுட்ப ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பொறியாளர்

சிறந்த தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருதை இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் பெற்றுள்ளார்.
தொழில்நுட்ப ஆஸ்கர் விருது பெற்ற இந்திய பொறியாளர்

இந்தியாவைச் சேர்ந்த பொறியாளருக்கு சிறந்த தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். "சயின்டிஃபிக் அன்ட் டெக்னிகல் ஆஸ்கர் விருது 2018" அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி ஹில்ஸில் வழங்கப்பட்டது.

அப்போது "ஷாட்ஓவர் கே1 கேமரா சிஸ்டம்" என்ற தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் செயலாக்கம் உள்ளிட்டவகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக புணேவைச் சேர்ந்த விகாஸ் சதாயீ என்பவருக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வான்வெளியில் இருந்து துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியும். ஹெலிகாப்டரில் பொருத்தப்படும் கேமரா மற்றும் லென்ஸ் ஆகியவற்றுக்கு இடையில் இதனை இணைப்பதன் மூலம் அதிர்வலைகளை கட்டுப்படுத்தி துல்லியமாக படம் எடுக்க உதவுகிறது.

இந்த வகை தொழில்நுட்பத்தை சதாயீ, ஜான் கோயல், பிராட் ஹர்ண்டல், ஷேன் பக்ஹம் ஆகிய 4 பேர் கொண்ட குழு வடிவமைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com