தகுதி அடிப்படையில் 'கிரீன் கார்டு': அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு வகை செய்யும் 'கிரீன் கார்டு'களை, விண்ணப்பதாரரின் தாய்நாடு அடிப்படியைல் இல்லாமல் அவரது தகுதிகளின் அடிப்படையில் வழங்குவதற்கு வகை
தகுதி அடிப்படையில் 'கிரீன் கார்டு': அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு வகை செய்யும் 'கிரீன் கார்டு'களை, விண்ணப்பதாரரின் தாய்நாடு அடிப்படியைல் இல்லாமல் அவரது தகுதிகளின் அடிப்படையில் வழங்குவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, சீனா போன்ற நாடுகள் பலனடையும் என்று கூறப்படுகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெறாமலேயே அந்த நாட்டில் நிரந்தரமாக வசிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் அனுமதி அளிக்கும் சான்று அட்டைகள் 'கிரீன் கார்டு'கள் என்று அழைக்கப்படுகின்றன.
இத்தகைய நிரந்தர வசிப்புரிமை, விண்ணப்பதாரர்கள் பிறந்த நாடுகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, எந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதோ, அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னிரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதிகள் அடிப்படையில் அவர்களுக்கு அந்த உரிமையை வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுமாறு, கடந்த மாத இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் எம்.பி.க்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆரின் ஹாட்ச் இதுதொடர்பான மசோதாவை கீழவையில் புதன்கிழமை கொண்டு வந்தார்.
மிகவும் பணித் தேர்ச்சி பெற்ற, அதிக திறமை கொண்டவர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மசோதாவை அறிமுகப்படுத்தி வைத்து ஆரின் ஹாட்ச் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com