பாகிஸ்தான் சிறுமி பலாத்காரம், கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் சனிக்கிழமை மரண தண்டனை விதித்தது.

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் சனிக்கிழமை மரண தண்டனை விதித்தது.
இதுகுறித்து, இந்த வழக்கை விசாரித்து வரும் லாகூர் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சஜ்ஜத் ஹுசைன் தனது தீர்ப்பில் கூறியதாவது: சிறுமி கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள இம்ரான் அலி நக்ஷôபந்திக்கு (23) மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
சிறுமியைக் கடத்திச் சென்றது, பாலியல் பலாத்காரம் செய்தது, கொன்றது, வயது வராதவர்களிடம் இயற்கைக்குப் புறம்பான முறையில் நடந்து கொண்டது ஆகிய குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுமியின் உடலை சிதைத்து அவமானப்படுத்தியதற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ஆம் தேதி மாயமான ஜைனப் அன்சாரி, நாந்கு நாள்கள் கழத்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பிரேத விசாரணையில் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
அந்தப் பகுதியில் சிறுமிகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், காவல்துறையினரின் மெத்தனத்தைக் கண்டித்து அந்தப் பகுதியில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த நிலையில், தீவிர விசாரணைக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியான இம்ரான் அலியை போலீஸார் கடந்த மாதம் 23-ஆம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜைனபைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததையும், பிறகு படுகொலை செய்ததையும் இம்ரான் அலி ஒப்புக் கொண்டார். இந்த நிலையில், இம்ரான் அலி மீதான குற்றச்சாட்டை பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது.
படுகொலை செய்யப்பட்ட ஜைனப் குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமானவரான இம்ரான் அலி, அந்தச் சிறுமியின் வீட்டருகே வசித்து வந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com