மாலத்தீவில் தடையை மீறி எதிர்க்கட்சியினர் போராட்டம்

மாலத்தீவில் தடையை மீறி போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டக்காரர்களை முன்னேற விடாமல் தடுக்கும் பாதுகாப்புப் படையினர்.
போராட்டக்காரர்களை முன்னேற விடாமல் தடுக்கும் பாதுகாப்புப் படையினர்.

மாலத்தீவில் தடையை மீறி போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீஸார் கைது செய்தனர்.
மாலத்தீவில் அரசியல் பதற்றம் நிலவி வரும் சூழலில், அங்கு நெருக்கடி நிலையை அதிபர் யாமீன் அப்துல் கயூம் அறிவித்துள்ளார்.
எனினும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நாடுமுழுவதும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.
இந்தத் தாக்குதல்களில் ஏராளமான போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். மேலும் பல எதிர்க்கட்சி ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்த போராட்டக்காரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலத்தீவில் நெருக்கடி நிலை அமலில் இருப்பதாகவும், இந்தச் சூழலில் போராட்டம் நடத்தும் உரிமை மக்களுக்குக் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீது உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தேசத் துரோகம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அதிபர் யாமீன் அப்துல் கயூம் தலைமையிலான அரசு சிறையிலடைத்தது.
இவர்களில், சிகிச்சைக்காக பிரிட்டன் சென்ற நஷீது மட்டும் அந்த நாட்டில் அடைக்கலம் பெற்றார். எனினும், மற்ற அரசியல் கைதிகள் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, எதிர்வரும் அதிபர் தேர்தலில் எதிர்ப்புகளே இல்லாமல் யாமீன் அப்துல் கயூம் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
இந்தச் சூழலில், முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆளுங்கட்சியிலிருந்து விலகிய 12 எம்.பி.க்களின் தகுதி நீக்கம் செல்லாது எனவும் அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்து.
இதையடுத்து, அந்த 12 பேரும் மீண்டும் எம்.பி. ஆகி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருடன் இணைந்து அதிபர் அப்துல்லா யாமீனை தகுதி நீக்கம் செய்ய முடியும் நிலை ஏற்பட்டது. 
இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தை காலவரையின்றி முடக்கிய அதிபர் யாமீன், நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். 
அதன் தொடர்ச்சியாக, தலைமை நீதிபதி அப்துல்லா சயீது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோரையும், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூமையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com